நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றியும், அதன் சாதக பாதகங்களை ஆராயும் வகையிலும் அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கங்களின் சம்மேளனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நிகழ்நிலைக் கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
இன்றிரவு 7.00 மணிக்கு நிகழ்நிலையில் நடைபெறவுள்ள அந்தக் கலந்துரையாடலில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை வாழ்நாள் பேராசிரியரும், பிரபல அரசியல் விமர்சகருமான பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட, சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான இர்மிஷா ரெகல் மற்றும் திறந்த பல்கலைக்கழக சட்டக் கற்கைகள் சிரேஷ்ட விரிவுரையாளர் நதீஷ் டீ சில்வா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆர்வமுள்ள அனைவரும் பங்கு கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.