ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரேனில் இருந்து சட்ட விரோதமாக பல்லாயிரக் கணக்கான குழந்தைகளை ரஷ்யாவுக்கு நாடு கடத்தியமை உட்படப் பல போர்க் குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது சுமத்தியுள்ளது.
சிறுவர்கள் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு ரஷ்ய ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சிறுவர்களுக்கான ரஷ்ய ஆணையாளருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பித்துள்ளது
கடந்த வருடம் பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா, உக்ரேனுக்கு எதிராக வலிந்து போர் தொடுத்த நாளில் இருந்து ரஷ்யப் படைகள் போர்க்குற்றம் புரியத் தொடங்கி விட்டன என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியுள்ளது
இதேநேரம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மொஸ்கோவிலுள்ள அதிபர் அலுவலகம், படை நடவடிக்கைகளின் போதான அழிவுகளைப் போர்க்குற்றங்கள் எனக் கூறமுடியாது என்று தெரிவித்துள்ளது.