அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட நிலையைில் சக மாணவிகளால் மீட்கப்பட்ட பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று 28 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை காலை பல்கலைக் கழகத்தின் மலசேகர விடுதியில் உள்ள தனது அறைக்குள் அதிக மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக மயக்கமுற்றிருந்த மாணவியைச் சக மாணவிகள் மீட்டுப் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மாணவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், உயிரிழந்த மாணவி கடந்த சில காலமாக மன அழுத்தத்துக்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது,