பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய வீசா விண்ணப்ப நிலையமான ஐ.வி.எஸ் குளோபல் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
நேற்றிரவு ஐ.வி.எஸ் குளோபல் நிறுவன வளாகத்தினுள் அவதானிக்கப்பட்ட, அதன் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட சம்பவம் ஒன்றின் காரணமாகவே வீசா விண்ணப்ப நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர விடயங்களுக்காக மட்டும் 011 2433583 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.