மறைந்த வர்த்தகர் தினேஸ் சாஃப்டரின் உடலில் இருந்து பாகங்கள் அல்லது உடற்கூற்று மாதிரிகள் பெறப்பட்டிருந்தால் அவற்றைப் பாதுகாப்பாகப் பேணுமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறைந்த வர்த்தகர் தினேஸ் சாஃப்டரின் மரணம் குறித்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளின் போது, தினேஸ் சாஃப்டரின் குடும்பத்தினர் சார்பின் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன முன்வைத்த விண்ணப்பத்துக்கமைய, மரணமடைந்தவரின் உடற்கூற்று மாதிரிகள் மரண விசாரணைக்காகவோ அல்லது புலனாய்வுக்காகவோ பெறப்பட்டிருந்தால் அவற்றைப் பாதுகாப்பாகப் பேணுமாறு கொழும்பு மாவட்ட பிரதம சட்ட வைத்திய அதிகாரிக்கும், அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பிரதான பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.