நீதியை மறைத்து வைக்க முடியாது – மல்கம் ரஞ்சித்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய சுதந்திரமானதும், நியாயமானதுமான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் நீதியை மறைத்து வைக்க முடியாது எனவும்  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேவாலயத்தில் இன்று காலை 8.40 க்கு விசேட ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் இந்த ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள பல தேவாலயங்களிலும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக விசேட ஆராதனைகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!