யாழ்ப்பாணத்திலுள்ள பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களில் ஒரு தொகுதியினருக்கு இந்திய அரசாங்கத்தின் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் இந்தியாவின் தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் கலாநிதி எல். முருகன் பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களில் ஒரு தொகுதியினருக்கு உலருணவுப் பொதிகளை வழங்கினார்.