தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.
திருமதி பி.எம்.எஸ் சார்லஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணைக்குழுவுக்குப் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவரது பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.