நானாட்டான் கமநல சேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் ‘நிலைபேறான வீட்டுத்தோட்டம்’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விதைகள் மற்றும் நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) காலை நானாட்டான் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் சிவசம்பு கனகாம்பிகை தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுக்களை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.