இந்தியாவின், இராமநாதபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராமநாதபுரம் “மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்” வசிக்கும் 3 இலங்கை தமிழர்கள் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதில் ஒருவர் மற்றொருவரை சுத்தியலால் தாக்கியதில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சுத்தியலால் அடித்துக் கொன்றதாக கூறப்படும் சந்தேகநபர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.
