அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை 17 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
