பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சாரதி போலிஸில் சிக்கினார்!

பொலிஸாரின் ஆணையை மீறியமையால் நேற்று 25ஆம் திகதி இரத்மலானை பகுதியில் கைது செய்யப்பட்ட வேனின் சாரதி குறித்து பல தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

குறித்த சாரதி பல குற்றங்கள் தொடர்பாக மெதிரிகிரிய பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா அல்லது போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட நபர் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் போக்குவரத்து சாரதியாக பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.

இரத்மலானையில் உள்ள கொலுமடம சந்திக்கு அருகில் பொலிஸ் அதிகாரிகளின் ஆணையை மீறி சென்ற வேனை கல்கிஸ்ஸை பொலிஸார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி நிறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!