எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று 21 ஆம் திகதி, சனிக்கிழமை மதியத்துடன் நிறைவடைந்தது. அதன் பின் ஒன்றரை மணி நேர ஆட்சேபனைக் காலம் வழங்கப்பட்டது.
அதன் முடிவில் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் சமர்ப்பித்த வேட்பு மனுக்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விவரங்கள் ஒவ்வொரு மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தாலும் இறுதி செய்யப்பட்டு கொழும்பிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்குரய கட்சிகளின் விவரம் வருமாறு:
யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழ்ப்பாணம் மாநகர சபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, இரண்டு சுயேச்சைக் குழுக்கள் ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகரசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சுயேச்சைக்குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சமத்துவக் கட்சி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சாவகச்சேரி நகரசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மூன்று சுயேச்சைக்குழுக்கள் ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
காரைநகர் பிரதேசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சோசலிச சமத்துவக் கட்சி, சுயேச்சைக்குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வேலணை பிரதேசபை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக்குழு ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, இரண்டு சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
வலிகாம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நவலங்கா நிதாஸ் பக் ஷயவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் கூட்டணியின் 3 அங்கத்தவர்கள் மாத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி தெற்கு (கரவெட்டி) பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்,
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் 8 அங்கத்தவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பிரதேசசபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச சபை
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக்குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டம்
பச்சிலைப்பள்ளி பிரதேசசபை
தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிப்பு.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சமத்துவக் கட்சி, சுயேச்சைக்குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆகில இலங்கைத் தமிழ் காங்கிரஸிலிருந்து முதலாவது பட்டியலிருந்து 5 அங்கத்தவர்களும், இரண்டாவது நியமனப் பட்டியலிருந்து 8 பேரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி பிரதேசசபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சமத்துவக் கட்சி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கரைச்சிப் பிரதேசசபை
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சமத்துவக் கட்சி, சுயேச்சைக் குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிலும் தலா ஒவ்வொரு வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டம்
கரைத்துறைபற்று பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, புதிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் கட்சி ஆகிய 4 கட்சிகளினதும் ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேசசபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேசசபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
துணுக்காய் பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டம்
மன்னார் நகரசபை
இலங்கைத் தமிழ் அரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மன்னார் பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக்குழு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரு வேட்பாளர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு வேட்பாளரும் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
நானாட்டான் பிரதேசசபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, லங்கா ஜனதா பக்ஷ, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மாந்தை மேற்கு பிரதேசபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
முசலி பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா ஜனதா பக்ஷ, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சுயேச்சைக் குழு ஒன்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில், வவுனியா மாநகரசபையில் தமிழர் சமூக ஐனநாயக கட்சி, ஐனநாயக இடதுசாரி முண்ணனி ஆகிய இரு கட்சிகளினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழர் விடுதலை கூட்டணியில் இரு வேட்பாளர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட இரு கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு சுயேச்சை குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழர் சமூக ஐனநாயக கட்சியின் 6 வேட்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வேட்பாளரும், சுயேச்சை குழுவில் இரு வேட்பளார்களினது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
செட்டிகுளம் பிரதேசசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வவுனியா வடக்கு பிரதேச சபையில் சுயேச்சை குழு ஒன்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் கட்சி ஒன்றின் வேட்பாளர் ஒருவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.