யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை மதத் தலைவர்களைச் சந்தித்தார்.
யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தை யாழ். ஆயர் இல்லத்திலும், யாழ்ப்பாணம் – ஆரியகுளம் நாக விகாரையின் விகாரதிபதியை நாகவிகாரையிலும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பில் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேனா, இன்று வியாழக்கிழமை முதல் மூன்று நாள்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.