மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன் லால் பெர்ணாண்டோ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகரத்தின் நியாயாதிக்கத்துக்குட்பட்ட வீதி அபிவிருத்திப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைத் தனக்குத் தெரிந்தவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
