எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் உட்பட காகிதாதிகளை அச்சிடும் பணி அரசாங்க அச்சகத் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு அச்சிடும் பணிகளுக்கான நிதி விடுவிக்கப்படாத காரணத்தால் தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் உட்பட காகிதாதிகளை அச்சிடும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்துக்கு அரசாங்க அச்சகத் திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.