எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று பல கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன.
யாழ். மாவட்ட தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சி மற்றும் பல சுயேச்சைக் குழுக்கள் யாழ். மாவட்டத்தில் தாம் போட்டியிடவுள்ள சபைகளுக்கான விண்னப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன.