யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பஸ் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் முகமாக இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காகப் பாடகர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் இடங்கலான குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று லை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும், மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
