நாளை மறுதினம் – மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்ககள் குறித்து மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் வடமாகாணப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல் மத்திய நிலையமாகச் செயற்படும் யாழ். மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டப் பதில் அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான எம். பிரதீபன் தலைமையில், பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் இ. சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி), நலனோம்பு சேவைகளுக்கான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் க.ஸ்ரீமோகனன், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாட்சி அலுவலர்கள் இக் கள ஆய்வில் பங்குபற்றினர்.



