கொழும்பிலிருந்து மலையகத்துக்கு கல்விச் சுற்றுலா சென்ற கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி பள்ளத்தினுள் விழுந்ததனால் மாணவர்கள் பலர் பலியாகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் சற்று முன்னர் நுவரெலியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஓட்டோ ஒன்றுடன் மோதியதனால் விபத்து ஏற்பட்டுள்ளது. நானு ஓயா பள்ளத்தினுள் பஸ் விழுந்ததனால் 51 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் முற்கொண்டு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. நுவரெலியா பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.