இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான் இலங்கையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள இளவயது அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
1977 ஆம் ஆண்டு தனது 29 ஆவது வயதில் இலங்கையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகி வரலாறு படைத்து, கடந்த 46 வருடங்களாக இலங்கையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள இளவயது அமைச்சர் என்ற பெருமையைத் தக்க வைத்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முந்திக் கொண்டு தனது 28 ஆவது வயதில் அமைச்சராகியிருக்கிறார் ஜீவன் தொண்டமான்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக அபிவிருத்தி அமைச்சராகக் கடந்த 19 ஆம் திகதி பதவியேற்றுக் கொண்டதன் மூலம் இந்தச் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.