உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் இந்தக் காலப்பகுதிக்குள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.