“சீனாவின் சகோதர பாசம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கான சீனத் தூதரகத்தினால் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் தலைமையிலான சீனத் தூதரக அதிகாரிகள் குழு இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்த்துக்கு விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தின் போது, செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் உதவிப் பொருள்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஜீ.என்.சூரியராஜா மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள், பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான ஆயிரத்து 70 குடும்பங்களுக்கு தலா ரூபா 6 ஆயிரத்து 490 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.





