நாட்டில் உள்ள மின் மார்க்கங்கள் அனைத்திலும் மின் விநியோகம் சீரடையும் வரையில் இன்றும், நாளையும் ஒன்றரை மணி நேர சுழற்சி முறை மின்வெட்டு அமல்படுத்தப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற எதிர்பாராத சம்பவத்தை அடுத்து மின்மார்க்கங்களில் ஏற்பட்ட சமநிலையின்மையை முடிவுக்குக் கொண்டுவரும் வரை – இன்று திங்கட்கிழமையும், நாளை செவ்வாய்க்கிழமையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒன்றரை மணிநேர மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.