மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி ஊடகப் பரப்பிலிருந்து இன்று விடைபெற்றார்.
தமிழ் ஊடகப் பரப்பில் பாரதி என அறியப்பட்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி சுகவீனம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது வீட்டில் காலமானார்.
மிகச் சிறந்த பத்தி எழுத்தாளராகவும், சித்தரிப்புக் கட்டுரையாளராகவும் விளங்கிய இவர், ஞாயிறு தினக்குரல், மாலைக்கதிர், வீரகேசரி, தமிழர் பொருண்மியம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியவர். மிக அண்மைக் காலத்தில் வீரகேசரி பத்திரிகையில் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியனார்.