வரி மதிப்பீடு மற்றும் வரி சமர்ப்பிப்புக்கான கால எல்லை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வருடத்துக்கான வரி மதிப்பீடு மற்றும் வரி செலுத்துவதற்கான இறுதித் தினம் கடந்த மாதம் 30 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரி சமர்ப்பிப்புக் கால எல்லையை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் அனைத்து வகையான சமர்ப்பணங்களும் நிகழ்நிலை யிலாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நிகழ்நிலையில் சமர்ப்பிப்பதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவி தேவைப்படுவோர் தத்தமது பிராந்திய உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களிலோ அல்லது தலைமைக் காரியாலயத்திலோ தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.