நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து மூன்று நோயாளர்களும், அவர்களது உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து தரை வழியாக அம்புலன்ஸ் மூலம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.