நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் கடமையிலிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம், யாழ்ப்பாணம் மாவட்டம், கோப்பாய்த் தொகுதியில் அமைந்துள்ள உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 32 வயதான தமிழ்ப் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கோப்பாய் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.