யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மறைத்து வைக்கப்படடிருந்த வீட்டில் வசித்து வந்த நபரொருவரைச் சந்தேகத்தின் பேரில் பொலீஸார் தேடிவருகின்றனர்.
ஐந்து வாள்கள் உட்பட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட போதிலும், சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை. ஊர்காவற்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து இன்று காலை நடத்தப்பட்ட சோதனையின் போது வீடொன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வன்முறையில் ஈடுபடுவதற்குத் தயாராக இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வீட்டில் வசித்துவந்த நபரொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் ஊர்காவற்துறைப் பொலிஸா சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.