யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் சிரமதானம்!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இராணுவம் மற்றும் பொலீஸாரின் பங்களிப்புடன் சுகாதாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நடவடிக்கையின் போது பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். அருள்ராஜ் , வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், கடற்படையினர், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!