பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு!

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் உறுதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் சமய ரீதியான சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பு உறவுகளை விருத்தி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி ஆகியோரும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!