பாலித தெவரப்பெருமவின் உடல் இன்று நல்லடக்கம்!

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

நேற்றிரவு வரை அவரது உடலுக்கு பெரும்பாலானவர்கள் அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அன்னாரது உடல் தற்போது, மத்துகமை, யட்டதொலவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கியமையினால் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தாமே தயாரித்த கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!