கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு சம்வம் -தீர்ப்பு ஏப்ரல் 30-ம் திகதி அறிவிப்பு!

சுத்தமான குடிநீர் தொடர்பில் கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) முடிவடைந்துள்ளது.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு, வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 30-ம் திகதி அறிவிக்கப்படும் என இன்று அறிவித்துள்ளது

ஆகஸ்ட்  01, 2013 அன்று, இராணுவத்தின் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 50 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி சேனவிரத்ன ஆகியோரின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரிகேடியர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர் .

நால்வருக்கும் எதிராக கம்பஹா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த வழக்கை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசர் மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழாம் ஒன்றை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!