நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையே இடம்பெறும் குமுதினி படகு 23 மில்லியன் ரூபாவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சேவையில் ஈடுபடுவதற்கான உயிர்காப்புச் சான்றிதழ் இன்னமும் கிடைக்கவில்லை என்று வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் எஸ். குறூஸ் தெரிவித்தார்.
குமுதினிப் படகு முழுமையாகத் திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கு கப்பற்துறை அமைச்சின் கீழான உயிர் காப்புச் சான்றிதழ் பெறவேண்டும். அந்த அனுமதிக்காக காத்திருக்கின்றோம். அதுவரையில் நெடுந்தீவு கடற்கரையில் குமுதினிப் படகு நிறுத்தப்படும்.
எதிர்காலத்தில் குமுதினிப் படகில் பயணிப்பவர்களிடம் கட்டணம் அறவிப்படுவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றது.
நெடுத்தீவைச் சேர்ந்த மக்கள் மற்றும் பணிக்காக அங்கு செல்லும் பணியாளர்கள் ஆகியோரிடம் கட்டணம் அறவிடாது சுற்றுலாவிகளிடம் மாத்திரம் கட்டணம் அறவிடுவதே இதுவரையிலான கொள்கையளவிலான முடிவாக உள்ளது. விரைவில் உறுதியான நிலைப்பாடு தெரியவரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.