சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 7 மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  கைது செய்யப்பட்ட மீனவர்களை  ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழில் 4 மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!