03 வயது குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

பிரித்தானியாவில் 03 வயது குழந்தையொன்றுக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியதவிலுள்ள வேல்ஸ் பிளாக்வுட் நகரை சேர்ந்தவர் ஸ்டேஷி ஹெர்ன் என்ற பெண்.

இவருக்கு 3 வயதில் வின்டர் என்ற பெண் குழந்தையொன்று உள்ளது.

இந்த குழந்தை வீட்டில் விளையாடும் போது தரையில் கிடந்த பொருட்களை எல்லாம் வாயில் போடுவதும், அதை சாப்பிடுவதுமாக இருந்துள்ளது.

பொதுவாக குழந்தைகளுக்கு இதுபோன்ற பழக்கம் வழக்கமானது என்பதால் நாளடைவில் இது சரியாகி விடும் குழந்தையின் தாய் நினைத்துள்ளார்.

ஆனால், வழக்கத்திற்கு மாறாக சோபாவில் உள்ள பஞ்சு, போட்டோ பிரேம், கண்ணாடி துண்டுகள், கட்டிலில் உள்ள மரக்கட்டைகள் என அனைத்து பொருட்களையும் இந்த குழந்தை சாப்பிட தொடங்கியதால் ஸ்டேஷி அதிர்ச்சியடைந்தார்.

இதனால் குழந்தை தூங்கும் நேரத்தை தவிர சில நேரங்களில் அந்த குழந்தையையே கண்காணிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, குறித்த குழந்தையின் தாயான ஸ்டேஷி ஹெர்ன்,  குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.

இதன்போது, அந்த குழந்தை எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய ஸ்டேஷி,

“குழந்தையின் உணவு பழக்கத்தால் குழந்தையை கண்காணிப்பதே முழு நேர வேலையாக மாறி விட்டது. குழந்தை எந்த நேரத்தில் எதை சாப்பிடுகிறது என்ற பயத்தில் இருக்க வேண்டி உள்ளது. நள்ளிரவில் எழுந்து போர்வை, மெத்தையையும் சாப்பிடுகிறது. இதில் இருந்து குழந்தையை மீட்க போராடி வருகிறேன். இதற்கு வைத்தியர்கள் உதவ வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!