சாந்தனின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் : நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலி!

சமயச் சடங்குகளின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்து சாந்தனின் இறுதி ஊர்வலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி – இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றிருந்தன.

சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களால் புகழுடலுக்கு இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து ஊர்மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையமொன்றுக்கு புகழுடல் தாங்கிச் செல்லப்பட்டதுடன் அங்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்றன.

இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம்,தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம், வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாகப் பயணித்து எள்ளங்குளம் இந்து மயானத்தில் சாந்தனின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!