ஹெளதிக் குழுக்களால் உலகக் கப்பல் போக்குவரத்து 90% பாதிப்பு!

இந்து – பசிபிக் பிராந்தியம், புவிசார் அரசியலின் மையப்பகுதியில் மீண்டும் நிலை கொள்வதாக இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜதந்திரியுமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”செங்கடலில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஹெளதி குழுக்களின் செயல்பாடுகளினால் உலக கப்பல் போக்குவரத்தின் 90 வீதம் பாதிக்கப்படுகின்றது.

இவ்வாறான செயல்பாடுகளினால் பல தீவு நாடுகளின் கடல் இறையாண்மை அச்சுறுத்தலுக்குள்ளாவதுடன், இதனை தவிர கால நிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்று பல்வேறு சவால்களும்  காணப்படுகின்றன.

குறிப்பாக  ரஷ்ய – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் என்பன இதில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன” இவ்வாறு சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!