பேச்சு சுதந்திரத்தை புரிந்து கொள்ளும் இடம் நாடாளுமன்றம் மட்டுமே!

”பேச்சு சுதந்திரத்தை புரிந்து கொள்ளும் இடம் நாடாளுமன்றம் மட்டுமே” என  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடவத்த, மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் அங்குரார்ப்பண  நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவிக்கையில் ” நாடாளுமன்ற செயற்பாட்டைப் பார்க்கும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுப்பினர்கள் என்னைக் குற்றம் சாட்டுவதை நீங்கள் காணலாம்.
நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் இதயமாகும். நாடாளுமன்றம் செயல்படவில்லை என்றால் நாட்டில் ஆட்சி இல்லை. சட்டவாக்கம் இல்லாமல் நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் என்பவற்றுக்கு தனித்து இயங்க முடியாது.
ஒரு நாட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதில் நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் ஆகியன சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.

ஜனநாயகம் இல்லையென்றால், நாளாந்தம் கொலைகள் நடக்கும். எந்தத் துறையினதும் கட்டுப்பாட்டின்றி இயங்காத நாடும் உருவாகும். அப்போது மக்கள் அந்த நாட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள். அந்த மக்கள் வேறு நாட்டிற்குச் சென்று அகதிகளாக வாழ முடிவு செய்வர். எனவே, மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக பாடுபடுவது தொடர்பான சட்டங்களை இயற்றும் திறன் நாடாளுமன்றத்துக்கே உள்ளது” இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!