தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னகும்புர – ராகல வீதியின் ஹராகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னகும்புரவில் இருந்து ராகலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியின் வலப்பக்கத்துக்கு திரும்பியபோது வேனுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.