களுத்துறை பிரதேசத்தின் வரத்த நிலையமொன்றை உடைத்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 28ம் திகதி வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு சென்ற உரிமையாளர் 30ம் திகதி காலை வர்த்தக நிலையத்தை திறந்த போது வரத்தக நிலையத்தின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.