இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இவருடன் தலைவர் பதவிக்காகப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றார். மற்றொரு போட்டியாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தேர்தல் ஆர்மபமாவதற்கு முன்னர், தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து வேட்பு மனுவை வாபஸ் வாங்கியிருந்தார்.