பட்டத்தில் பறக்க வேண்டாம் – யாழ் இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

அதேசமயம் இளைஞர்கள் சிலர் தமது பட்டத்துடன் பல அடி உயரங்களுக்கு பறந்து ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடும், சாகசம் செய்யும் காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் உலாவருகின்றது.

இளைஞர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இது போன்ற உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்து செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!