விவசாயத்தில் புதிய மாற்றம்-ஜானாதிபதியின் தைப்பொக்கல் வாழ்த்து!

தைத் திருநாள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு  அறுவடைத் திருவிழாவாகுமென ஜனாதிபதி ரணில் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொடர்ந்து  அவரது  வாழ்த்து செய்தியில் தெரிவிக்கையில் ,வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள் குறிக்கிறது.  நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இரண்டு வருடங்களாக விவசாயிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் நாடு வெற்றிப் பாதைக்குள் பிரவேசிக்கும் வேளையில் தைப்பொங்கல் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகிறது.

மேலும் வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அத்துடன் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் அனைத்து பணிகளும் வெற்றியளிக்க  தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!