இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத் திட்டங்களைப் பார்வையிட்டது.
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையிலான குழுவினர் இன்று காலை கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து செயற்றிட்ட நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர்.
இதன்போது உலக வங்கியின் உயர் மட்ட குழுவைச் சேர்ந்தவர்கள், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை நடைபெறவுள்ள பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கு இடையிலான சந்திப்பில் இவர்கள் கலந்து கொள்ளளவுள்ளனர்.உலக வங்கியின் உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிப்பதும் இந்த விஜயத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.