கல்வியியல் கல்லூரிகளில் கற்று, தேசிய போதனாவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்வி பணிப்பாளர் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.