இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், சித்திரை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் 50,537 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாகஇந்தியா, பிரித்தானியா , ரஷ்யா, ஜெர்மனியைச் சேர்ந்தவர்களே அதிகளவில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இவ்வருடத்தில் ஆறு இலட்சத்து 86,321 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.