கஞ்சா வழக்கு, விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரொருவர் யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்தில் வைத்து நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த கஜன் என்ற சந்தேக நபர் கட்டாருக்குப் போலியான கடவுச் சீட்டைப் பயன்படுத்தி தப்பிச்செல்ல முற்பட்ட போதே யாழ். மாவட்டப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி காரைநகர் ஊரிப் பகுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார். மேலும் மல்லாகம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் அவர் மீது கஞ்சா தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.