ஈழ விடுதலைப் போரின் முதல் உயிர்க் கொடையாளி தியாகி பொன். சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை, காலை உரும்பிராயில் அமைந்துள்ளள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தியாகி பொன். சிவகுமாரனின் உருவச் சிலைக்கு முன்னால் சுடரேற்றி, உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் வேறுபாடுகளின்றி பல்வேறு தரப்புகளாலும் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.