இந்திய இணை அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

இந்தியாவின் மீன்வள இணை அமைச்சர் அடங்கிய குழு பலாலி சர்வதேச விமானத்தை இன்று மதியம் வந்தடைந்தனர். இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின்உயர்மட்ட குழு பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ் இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர் ஆகியோர் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து,பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த இணை அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!